மோசடி வாலிபருக்கு இரண்டு ஆண்டு சிறை மற்றும் ரூ.1.26 கோடி அபராதம்

மோசடி செய்த வாலிபருக்கு இரண்டு ஆண்டு சிறை ரூ.1.26 கோடி அபராதம்

Update: 2023-11-29 11:17 GMT

மோசடி வாலிபருக்கு இரண்டு ஆண்டு சிறை மற்றும் ரூ.1.26 கோடி அபராதம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (44). இவர் சாரதா கல்லூரி சாலையில் டிராவல்ஸ் மற்றும் சிட்பன்ட் நடத்தி வந்தார். 2012 முதல் 2014ம் ஆண்டு வரை 5 லட்சம், 10 லட்சம், 20 லட்சம் ரூபாய் என மூன்று பிரிவுகளில் சீட்டு நடத்தி வந்தார்‌. இதில் சேர்ந்த 23 பேருக்கு சீட்டு பணத்தை திரும்ப தரவில்லை எனக் கூறி 2014ம் ஆண்டு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் 1.39 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு சேலம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் செந்தில்குமாருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 1.26 கோடி அபராதமும் விதித்து நீதிபதி கிரிஸ்டல் பபிதா தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News