உதய் மின் திட்டம், மின்வாரிய நஷ்டம் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? - தங்கமணி

Update: 2024-07-24 06:39 GMT

தங்கமணி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

உதய் மின் திட்டம், மின்வாரிய நஷ்டம் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி சவால் விடுத்துள்ளார்.

மத்திய அரசு உதய் திட்டத்தில் இணைய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியபோது ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அதனை ஏற்கவில்லை. ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தபோது மத்திய அரசின் நெருக்கடி காரணமாக உதய் திட்டத்தில் தமிழக அரசு சேர்ந்தது. உதய் திட்டத்தில் தமிழக அரசு சேர்ந்தததால் தான் ஆண்டுக்கு ஒருமுறை மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

எனவே மின் கட்டண உயர்வுக்கு அதிமுக தான் காரணம். இந்த மின் கட்டண உயர்வுக்கு அதிமுக தான் தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில் உதய் மின் திட்டத்தால் தமிழக மக்களுக்கு நன்மைதான் என்பதை நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சவால் விடுத்துள்ளார். நிர்வாக திறமையால் 3 முறை மின் கட்டண உயர்வுக்கு பின்னரும் தமிழ்நாடு மின்வாரியத்தின் நஷ்டம் பற்றி விவாதிக்க தயாரா? மின்வாரியத்தில் என்ன நடந்தது, என்ன நடக்கிறது என்பதை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்னும் புரிந்து கொள்ளாமல் உள்ளார். 

மின் கட்டணத்தை உயர்த்திவிட்டு அதிமுக-வை குறை கூறுவதா? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.     

Tags:    

Similar News