உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்: 100 பேருக்கு இலவச கேஸ் இணைப்பு
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி 100 பேருக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2023-11-28 14:04 GMT
இலவச இணைப்பு வழங்கல்
திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழக விளையாட்டு நலத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சின்ன திருப்பதி பகுதியில் வசித்து வரும் நூறுக்கும் மேற்பட்டோருக்கு. இலவச கேஸ் இணைப்புகளை மத்திய மாவட்ட திமுக செயலாளரும் எம் எல் ஏவுமான வக்கீல் ராஜேந்திரன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாநகர திமுக செயலாளர் ரகுபதி, மாநில பொதுக்குழு உறுப்பினர் மணி, 8வது கோட்ட செயலாளர் செல்வம், பொருளாளர் அல்லி முத்து, பாரத் கேஸ் ஏஜென்சி உரிமையாளர் சரண் உட்பட பலர் பங்கேற்றனர்.