மீண்டும் பெண்களுக்கு தமிழக அரசு கொடுத்த சர்ப்ரைஸ் !

Update: 2024-05-20 07:29 GMT

மகளிர் உரிமை தொகை

மகளிர் உரிமை தொகையில் புதிய பயனாளிகளை சேர்க்கும் முடிவு ஜூன் அல்லது ஜூலை மாதம் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மகளிர் உரிமை தொகையில் புதிய விண்ணப்பதாரர்களை சேர்ப்பதார்கான முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இந்த மாத இறுதியில் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் கலைஞர் மகளிர் உரிமை தொகையில் தமிழ்நாட்டில் கூடுதலாக 2.30 லட்சம் பேர் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திமுகவின் முக்கிய தேர்தல் அறிவிப்பான மகளிர் உரிமை தொகை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிய விண்ணப்பதாரர்களை பெறுவதற்கான விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு பெண்களிடம் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் ஜூன் 4 வரை தேர்தல் விதிகள் உள்ளதால் புதிய லிஸ்ட் எடுக்க முடியாது. ஜூன் 4க்கு பின் லிஸ்ட் எடுத்தால் குறைந்தது 2 வாரங்கள் தேவைப்படும். அப்படி லிஸ்ட் எடுக்கும் பட்சத்தில் ஜூன் 15ம் தேதிக்குள் புதிய நபர்களுக்கு பணம் போட முடியாது.

இதனால் இந்த திட்டத்தில் புதிதாக சேர்க்கப்படுபவர்களுக்கு ஜூன் 15க்கு பதில் ஜூலை 15ம் தேதியே பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

யாருக்கெல்லாம் வாய்ப்பு :

1. முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள்

2. முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள்

3. புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள்

4. புதிதாக திருமணம் ஆன பெண்கள்

மேலும் மறுவாழ்வு முகாம் பெண்களுக்கும் விரிவுபடுத்தபட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 90 சதவீத மகளிருக்கு உரிமைத்தொகை சென்று சேர்ந்துவிட்டது என்றும், தகுதியான ஒருசிலர் விடுபட்டு இருந்தால் அந்த பட்டியலை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க திமுகவினருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தேர்தலுக்கு பின் இவர்களுக்கும் பணம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News