துணை முதலமைச்சர் பதவி; ரஜினி ஆவேசம் குறித்து உதயநிதி பதில்!!

உதயநிதி துணை முதலமைச்சர் ஆகிறாரா? ரஜினிகாந்த் ஆவேசம் என்று தலைப்பிட்டு வெளியிட்டுள்ள நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2024-09-21 07:04 GMT

udhayanithi stalin

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், பாராளுமன்ற தேர்தலின் போது 22 நாட்கள், 9 ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றுப்பயணம் செய்தேன். அப்போது தமிழக அரசின் திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் பெரிய ஆதரவு இருந்ததையும், பாரதிய ஜனதா மீது மக்கள் கடும் கோபத்தில் இருந்ததையும் உணர முடிந்தது. 2024 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் பற்றி இந்த புத்தகத்தில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. நமது முதலமைச்சரின் கட்டுரை முதல் கட்டுரையாக உள்ளது. பாரதிய ஜனதாவின் 10 ஆண்டு பாசிச போக்கையும் அதற்கு இந்தியா கூட்டணியும் மக்களும் எப்படி கடிவாளம் போட்டார்கள் என்பதையும் முதலமைச்சர் 360 டிகிரியில் அலசியுள்ளார். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மோடியின் நடை உடை பாவனைகள் தான் மாறி இருக்கிறதே தவிர அவரது பாசிச சிந்தனைகள் மாறாமலேயே உள்ளன. தேர்தலில் கடும் பின்னடைவை சந்தித்த பிறகும் கூட ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த துடிக்கிறார். பிரதமர் மோடி பற்றி எப்படிப்பட்ட பிம்பம் உருவாக்கப்பட்டது என்று உங்களுக்கே தெரியும். அவரை தோற்கடிக்க முடியாது என்று சொன்னார்கள். 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று கலர் கலராய் ரீல் எல்லாம் விட்டார்கள். ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும் பாரதிய ஜனதாவில் சேரலாம் என்று விளம்பரம் செய்தார்கள். ஆனால் மத்தியில் சொந்த காலில் கூட நின்று அவர்களால் ஆட்சி செய்ய முடியவில்லை. சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் காலை பிடித்து ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். மகாராஷ்டிராவில் சிவ சேனா, காஷ்மீரில் மக்கள் மாநாட்டு கட்சி, ஒடிசாவில் பிஜூ ஜனதாதளம் என பல்வேறு கட்சிகளை பாரதிய ஜனதா காலி செய்துள்ளது. அந்த வரிசையில் முதல் இடத்தில் நிற்கும் கட்சியாக நமது எதிர்க்கட்சி (அ.தி.மு.க.) தள்ளப்பட்டு உள்ளது. அவர்கள் அதில் இருந்து மீண்டு வரவேண்டும் என்று தான் என்னைப் போன்றவர்களின் ஆசையாக உள்ளது. மோடியை பார்த்து அமெரிக்காவே பயப்படுகிறது. ஐரோப்பாவே நடுங்குகிறது என்று சங்கிகள் கூறி வருகிறார்கள். ஆந்திரா மாநிலத்தில் சந்திரபாபு நாயுடுவை பார்த்துதான் மோடி பயப்படுகிறார் என்று கூறுகிறார்கள். மோடியின் பிம்பத்தை இனி பீகார் மக்கள் கூட நம்ப மாட்டார்கள்.அயோத்தியில் ராமர் கோவிலை கட்டி நாங்கள் தான் ராமரின் அம்பாசிடர்கள் என்று காட்டிக்கொண்ட பிறகும் அயோத்தியை உள்ளடக்கிய பைசா பாத் தொகுதியில் அந்த கட்சியை மக்கள் புறக்கணித்துள்ளார்கள். தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் போனதற்கு மக்கள் அவர்கள் மீது வைத்துள்ள கோபமே முக்கிய காரணமாகும். தமிழக மக்கள் எப்போதும் பாரதிய ஜனதா கட்சியை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மோடி 8 முறை தமிழகத்துக்கு வருகை தந்தார். கடைசி கட்ட பிரசாரம் முடிந்த பிறகும் கன்னியாகுமரியில் போட்டோ சூட் நடத்தி தியானம் நடத்தினார். இருப்பினும் அவர்களின் நாடகம் தமிழகத்தில் எடுபடவில்லை. பாரதிய ஜனதாவை மக்கள் நடுரோட்டில் நிறுத்தினார்கள். தி.மு.க. கூட்டணியை 40 தொகுதிகளிலும் வெற்றி பெற செய்தார்கள். மோடி நினைத்தது போல தேர்தல் முடிவுகள் வந்திருந்தால் மாநிலங்களை எல்லாம் முனிசிபாலிட்டியாக்கி இருப்பார். இந்தியாவை காக்கும் பணியில் தி.மு.க. எப்போதுமே முன் வரிசையில் இருக்கும். தி.மு.க.வின் வாக்கு சதவீதம் குறைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. கடந்த தேர்தலில் 24 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க. இம்முறை 22 இடங்களில்தான் போட்டியிட்டது வாக்கு சதவீதம் குறைந்ததற்கான காரணமும் புத்தகத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சவாலான தொகுதிகளை தி.மு.க. எடுத்துக் கொண்டு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்தோம். எதிரிகளை வீழ்த்த முதலமைச்சர் மேற்கொண்ட வியூகம் இதுவாகும். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தி.மு.க.வின் வாக்கு வங்கியை அணுக வேண்டும். கழகத்தின் வலிமை பெருகிக் கொண்டே செல்வதுதான் உண்மையாகும். முதலமைச்சர் உருவாக்கியுள்ள இந்த கூட்டணி 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றியை பெறும். யூடியூப்பில் ஒரு செய்தியை பார்த்தேன். "உதயநிதி துணை முதலமைச்சர் ஆகிறாரா? ரஜினிகாந்த் ஆவேசம் என்று தலைப்பிட்டு வெளியிட்டுள்ளார்கள். துணை முதலமைச்சர் பதவி பற்றி ரோட்டில் போகிறவர்களிடம் எல்லாம் மைக்கை நீட்டி கருத்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படித்தான் ரஜினிகாந்திடமும் மைக்கை நீட்டி கேட்டுள்ளனர். அவர் பாவம். என்னிடம் அரசியல் பற்றி கேட்காதீர்கள் என்று கூறி விட்டு சென்று விட்டார். இதற்குதான் அப்படி தலைப்பு வைத்து உள்ளார்கள். இதுபற்றி நான் பேசியிருப்பதால் ரஜினிகாந்துக்கு உதயநிதி பதிலடி என்றும் போடுவார்கள். 2024 தேர்தலை பற்றி 25 கட்டுரைகளுடன் புத்தகம் வெளியிட்டுள்ளார்கள். 2026 தேர்தல் முடிவுக்கு பிறகு 50 கட்டுரைகள் அடங்கிய புத்தகமாக நீங்கள் வெளியிட வேண்டும் என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News