கமலக்கருங்காலி வராகி அம்மன் கோவிலில் உலக்கை பிரதிஷ்டை!

சோளிங்கர் கமலக்கருங்காலி வராகி அம்மன் கோவிலில் உலக்கை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

Update: 2024-04-29 14:28 GMT

சோளிங்கர் கமலக்கருங்காலி வராகி அம்மன் கோவிலில் உலக்கை பிரதிஷ்டை செய்யப்பட்டது.


ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த புலிவலம் கிராமத்தில் அமைந்துள்ள கமலக்கருங்காலி வராகி அம்மன் கோவிலில் கருங்காலி அம்மன், மூன்று அடி உயரத்தில் கருங்காலி உலக்கை பிரதிஷ்டை விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கமலக் கருங்காலி வராகி அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், மலர்கள் மற்றும் ரூபாய் நோட்டு மாலையால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து கணபதி ஹோமம், கலச பூஜை, 108 மூலிகை கொண்டு சிறப்பு யாக பூஜை செய்து கருங்காலி அம்மன், 3 அடி உயரத்தில் கருங்காலி உலக்கைக்கு புனித நீர் ஊற்றி பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து திரளான பெண்கள் கலந்து கொண்டு வரம் வேண்டி கருங்காலி உலக்கைக்கு பன்னீரால் அபிஷேகம் செய்து, மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை செய்தனர். தேங்காய் உடைத்து நெய்தீபம் ஏற்றி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். இந்த சிறப்பு பூஜையில் புலிவலம், கொடைக்கல், சோளிங்கர், ஆயல், பானாவரம் சூரை, போளிப்பாக்கம், தப்பூர் தாளிக்கால், கரிக்கல் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் கருங்காலி அம்மன் கொண்ட படம், பிரசாதம், அன்னதானம் வழங்கினார்கள்.
Tags:    

Similar News