முடிவுக்கு வராத நெல்லை ஜெயகுமார் மரண வழக்கு- திணறும் காவல்துறை !! சல்லடை போட்டும் கிடைக்காத தடயம் ....
நெல்லையில் மர்மமான முறையில் உயிரிழந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் வழக்கில் போலிசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்த போதிலும் இதுவரை எந்த தடையும் கிடைக்கவில்லை. கிணற்றில் சல்லடை போட்டு தேடியும் அவரது செல்போனும் கிடைக்கவில்லை தடயங்கள் எதுவும் சிக்காதது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே இரண்டாம் தேதி தனது தந்தை காணவில்லை என நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மகன்கள் காவல் நிலையத்திலா புகார் அளித்துள்ள நிலையில் சொந்த ஊரில் அவரது தோட்டத்தில் வீட்டிற்கு பின்புறம் உடல் எறிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். குறிப்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களை குற்றம் சாட்டி கடிதம் எழுதியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையினர் இது தொடர்பாக 9 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜெயக்குமாரின் கைகால்கள் இரும்பு கம்பியால் கட்டப்பட்டு வயிற்றில் கடப்பக்கால் ஒன்றும் கட்டப்பட்டிருந்தது. இதனால் ஜெயக்குமார் குடும்பத்தினர் கொலை வழக்கு என குற்றம் சாட்டியுள்ளனர். ஜெயக்குமார் மரணம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் ரீதியான கொலையா? தொழில் ரீதியான கொலையா? கடன் பிரச்சனையா ? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஜெயக்குமாரின் செல்போன் தொடர்புகள் குறித்து போலீஸ் விசாரணை நடத்திய போது ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 2000 நபர்களிடம் அவர் பேசியிருந்தார். மும்பையில் இருந்து அவருக்கு அதிகமான தொலைப்பேசிகள் வந்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது, இரண்டாம் தேதி புதிய எண்களில் இருந்து அவருக்கு செல்போனில் ஏதேனும் தகவல் வந்திருக்கிறதா என காவல்துறை என விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் அவரது செல்போனை தற்போது வரை கண்டுபிடிக்க இயலவில்லை. கிணற்றுக்குள் செல்போன் வீசப்பட்டதா? என ஆய்வு செய்த போது 80 அடி ஆழ கிணற்றில் தண்ணீரை இறைத்தும் தொடர்ந்து நீரூற்று பெருகிக்கொண்டே வருவதால் செல்போனை கண்டுபிடிக்க தாமதம் ஏற்பட்டது.
அந்த செல்போன் கிடைத்தாலும் அதிலிருந்து தகவல் இனியும் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.. பல்வேறு கோணங்களில் விசாரித்தும் ஜெயக்குமார் மரணம் வழக்கில் இதுவரை எந்த தடயங்களும் அல்லது சாட்சிகளும் கிடைக்கவில்லை. மேலும் குற்றவாளிகள் யார் என்பதை கூட இதுவரை காவல் துறையினர் கண்டுபிடிக்காதது வழக்கில் பலத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இருந்த போதும் விசாரணை தொடர்ந்து வருகிறது. ஜெயக்குமார் மரணத்திற்கு காரணம் குறித்து நிட்சயம் தெரியவரும் என நெல்லை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.