குறிஞ்சி நகர் பகுதியை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு

கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்ட குறிஞ்சி நகர் பகுதியை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்தார்..

Update: 2023-12-27 02:20 GMT

குறிஞ்சி நகர் பகுதியை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் கடந்த 17, 18 ந் தேதி அதிகனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது..இந்தநிலையில், தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட தூத்துக்குடி வருகை தந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் அனைத்து துறை செயலாளர்கள், துறை இயக்குனர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் வெள்ளை சேதம் குறித்தும் மேற்கொள்ளப்பட்டுள்ள நிவாரண பணிகள் குறித்தும் விளக்கம் கேட்டு ஆலோசனை நடத்தினார்.

அதன் பின்னர், குறிஞ்சி நகர் பகுதியில் மழை வெள்ள நீர் தேங்கியுள்ள பகுதிகளை பார்வையிட்டு மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் வீடியோ மூலம் வெள்ள சேதங்களை பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது, மத்திய இணை அமைச்சர் L.முருகன், தமிழக நிதி மனித வள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் உட்பட அனைத்து துறை இயக்குனர்கள், செயலாளர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News