மத்திய அமைச்சர் அமித்ஷா பயணம் ரத்து ?
தமிழ்நாட்டில் நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம் மேற்கொள்ள இருந்த நிலையில் அவரது தமிழ்நாடு பயணம் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.;
Update: 2024-04-03 19:29 GMT
அமித்ஷா
தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் மதுரை, தேனி, சிவகங்கை, கன்னியாகுமரியில் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.. விரைவில் வெளியாக என எதிர்பார்க்கப்படுகிறது.