மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தூத்துக்குடி வருகை

தூத்துக்குடியில்  வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தூத்துக்குடி வருகிறார்.

Update: 2023-12-26 02:14 GMT

நிர்மலா சீதாராமன் 

 மத்திய நிதி அமைச்சகத்தின் எக்ஸ் பதிவில், "மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 26-ந்தேதி மதியம் 2.30 மணிக்கு தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறார். முன்னதாக மதியம் 12.30 மணிக்கு வெள்ள பாதிப்புகள் குறித்து கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்" என கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் நிர்மலா சீதாராமன், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி செல்கிறார். தூத்துக்குடி டவுன், முத்தையாபுரம், ஏரல், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் சேதமடைந்த சாலைகள், வீடுகள், விளைநிலங்கள் ஆகியவற்றை பார்வையிடுகிறார். ஏற்கனவே மத்திய குழுவினர் வெள்ளம் வடிவதற்கு முன்பே நேரில் ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். தமிழக அரசு வெள்ள நிவாரண நிதியாக ரூ.21 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுள்ளது. நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மதிப்பீடு செய்த பிறகு மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கும் நிவாரண நிதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News