நான் மத்திய அமைச்சராவது இறைவன் கையில்தான் உள்ளது - பன்னீர்செல்வம்

என்னுடைய வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது, நான் மத்திய அமைச்சராவது இறைவன் கையில்தான் உள்ளது என முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மதுரையில் கூறினார்.

Update: 2024-06-03 11:21 GMT

என்னுடைய வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது, நான் மத்திய அமைச்சராவது இறைவன் கையில்தான் உள்ளது என முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மதுரையில் கூறினார்.


என்னுடைய வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது. நான் மத்திய அமைச்சராவது இறைவன் கையில்தான் உள்ளது முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மீனாட்சியம்மன் கோவிலில் பேட்டி  அளித்தார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று மாலை சாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, நடைபெற்று முடிந்திருக்கக்கூடிய இந்த நாடாளுமன்ற தேர்தல் இந்திய திருநாட்டை யார் ஆள வேண்டும் என்பதற்காக நடைபெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருவதற்கு நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது.

வெற்றி கூட்டணியில் தற்போது நீங்கள் உள்ளீர்கள் உங்களுக்கான பலன் தற்போது கிடைக்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ்? என்னை பொருத்தவரை பலன்களை எதிர்பார்த்து கட்சி வேலை செய்பவன் நான் அல்ல. கட்சிக்கு விசுவாசமாக உழைப்பவன். என்னுடைய வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது. உங்களை விரைவில் மத்திய அமைச்சராக பார்த்து விடலாமா என்று கேட்ட கேள்விக்கு? நான் மத்திய அமைச்சராவது இறைவன் கையில்தான் உள்ளது.

இன்றைக்கு இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலையில் நாட்டு நடப்புகளை அரசு செய்கின்ற தவறுகளை சுட்டிக் காட்டுகின்ற ஒரே இயக்கமாக அதிமுக உரிமை மீட்பு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசியல் நடப்புகளை மிகத் துல்லியமாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் யாரால் எப்படி இந்த கட்சி சின்னாபின்னமாக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும் அது நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவு வந்த பிறகு மக்களுக்கு தெரியும் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News