ரூ.69 லட்சம் மதிப்பில் சமுதாய கூடம் மேம்படுத்தும் பணி
திருவிக நகர் அருகே வெங்கடராத்திரி சமுதாய கூடத்தை ரூ.69.7 லட்சம் மதிப்பில் மேம்படுத்தும் பணியை அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.;
Update: 2024-03-04 03:13 GMT
அடிக்கல் நாட்டு விழா
இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு- 76 உட்பட்ட வெங்கடராத்திரி சமுதாயக் கூட்டத்தை ரூ 69.07 இலட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் மேயர் பிரியா, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர் தமிழ்செல்வி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.