யூபிஎஸ்சி தேர்வு : மத்திய அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளின் கேள்வித்தாள்களை மாநில மொழிகளுக்கு மொழி மாற்றம் செய்து வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை அளித்துள்ளது.
Update: 2024-04-24 08:19 GMT
ஐ.ஏ.எஸ் போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களை 22 மாநில மொழிகளிலும் வழங்கக் கோரி மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தற்போது எளிதாக மொழிபெயர்ப்பு செய்யலாம் என்றும் மொழி பெயர்ப்பு நூறு சதவீதம் சரியாக இல்லாவிட்டாலும், அவற்றை மனிதர்களைப் பயன்படுத்தி சரி செய்யலாம் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் வழக்கின் விசாரணை ஜூன் 28 ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.