கோமாரி தடுப்பூசி முகாம்!

நீலகிரியில் 28,200 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Update: 2024-06-10 16:29 GMT

தடுப்பூசி முகாம்

நீலகிரி மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடங்கியது. கால்நடைகள் வளர்ப்பின் பால் உற்பத்தி செய்யப்பட்டு, மனிதர்கள் அத்தியாவசிய உணவாக விளங்குகிறது. இதேபோல் கால்நடைகளில் இருந்து பெறப்படும் பால், தோல், மாமிசம் உள்ளிட்ட பிற உப பொருட்கள் மூலம் தனிநபர் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தார வளர்ச்சிக்கு உதவிகரமாக உள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த கால்நடைகளை கோமாரி நோய் அதிகம் தாக்கி பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பு ஏற்படுத்துகிறது. கோமாரி நோய் பொதுவாக குளிர், பனிக்காலம், நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கிவரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு, கால்நடைகளுக்கு தடுப்பு ஊசி செலுத்தாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது. இந்த நோய் பாதித்தால் மாடுகளுக்கு சிறுநீர்,பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கும் பரவும். கோமாரி நோயின் காரணமாக இறப்புகள் குறைவாக இருந்தாலும், கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைந்து விடும். எருதுகளில் வேலை திறன் குறைந்து விடும். மேலும் கறவை மாடுகளில் சினை பிடிப்பு தடைப்படுவது, இளங்கன்றுகள் இறப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.

எனவே இந்த நோய் பாதிப்புகளில் இருந்து கால்நடைகளை காப்பாற்றுவதற்காக நீலகிரி மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில ஊட்டி அடுத்த கேத்தி பேரூராட்சி உல்லாடா பகுதியில் ஐந்தாம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடங்கியது. இதை மாவட்ட ஆட்சியர் அருணா தொடங்கி வைத்து பார்வையிட்டார். இது குறித்து கால்நடைத்துறை இணை இயக்குனர் சத்தியநாராயணா கூறுகையில், நீலகிரியில் விவசாயத் தொழிலுடன் கால்நடை வளர்ப்பும் முக்கியமாக உள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் 28,200 கால்நடைகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News