மீனவர் பேரவை தலைவரை சந்தித்த வானதி சீனிவாசன்
சென்னை கொட்டிவாக்கத்தில் மீனவர் பேரவை தலைவரை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் சந்தித்தார்.;
Update: 2024-06-14 08:39 GMT
சென்னை கொட்டிவாக்கத்தில் மீனவர் பேரவை தலைவரை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் சந்தித்தார்.
தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகனின் மனைவி மாலதி சமீபத்தில் இயற்கை எய்தினார். இந்நிலையில் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள அன்பழகனின் இல்லத்தில் அன்பழகனை கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவருடன் தமிழக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா உடன் இருந்தார்.