விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேட்புமனு தாக்கல்

இந்தியா கூட்டணி சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்

Update: 2024-03-28 01:40 GMT

வேட்புமனு தாக்கல் 

 இந்திய நாடாளுமன்றத்திற்கான தேர்தலையொட்டி தமிழகத்தில் முதல் கட்டமாக வாக்கு பதிவு நடைபெறுகிறது. வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். திமுக கூட்டணியில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தனது வேட்புமனுவை  தாக்கல் செய்தார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரும், சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆனி மேரி ஸ்வர்ணாவிடம் தனது வேட்பு மனுவை திருமாவளவன் தாக்கல் செய்தார்.அவருடன் வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா, காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர் உறுதிமொழி எடுத்துக் கொண்ட திருமாவளவன் உளமாற என்று கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தொல் திருமாவளவன், இன்று வேட்பு மனு தாக்கல் செய்து இருக்கிறேன். 30ஆம் தேதி சின்ன ஒதுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படுவதாக தெரியவில்லை. பாஜக கூட்டணி கட்சிகளுக்கும் மற்றும் உடனடியாக சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் இதுவரை சின்னம் ஒதுக்கவில்லை அல்லது நிராகரிக்கிறது தேர்தல் ஆணையமே ஒருதலைப் பட்சமாக செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. நேர்மையோடு இத்தேர்தலை நடத்த வேண்டும். அப்பொழுதுதான் ஜனநாயகம் காக்கப்படும்.ஆகவே தேர்தல் ஆணையம் ஒருதலைப் பட்சமாக இல்லாமல் நேர்மையோடு இந்த தேர்தலை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று கூறினர்.

திருமாவளவனை தோற்கடிக்க பாஜக பெரு முயற்சி எடுப்பதாக வெளிவந்த செய்திகள் குறித்து கேட்டபொழுது, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜக பூஜ்ஜியம் என்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கூறியுள்ளார். எனவே அவர்கள் எடுக்கும் முயற்சி வெற்றி பெறாது. தென்னிந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி பெரும் பின்னடைவை அல்லது தோல்வியை சந்திக்கும் என்று திருமாவளவன் கூறினார். திருமாவளவன் தொகுதிக்கு அதிகம் செல்வதில்லை எதிர்க்கட்சியாக செயல்படுவதால் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை என்ற பொதுமக்களே எண்ணம் குறித்து கேட்ட பொழுது உறங்கும் நேரம் தவிர 20 மணி நேரம் எப்பொழுதும் மக்களிடம் இருக்கிறேன். மக்களுடன் பழகுகிறேன். சொந்தத் தொகுதியில் நிற்கிறேன். எனவே மக்கள் மீண்டும் என்னை தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உங்களது வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்று கேட்ட பொழுது, தமிழக முழுவதும் 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும். அதிலே சிதம்பரமும் ஒன்று என்று திருமாவளவன் கூறினார்.

Tags:    

Similar News