திருத்தணி மலைக்கோவிலுக்கு வாகனங்கள் செல்ல தடை

திருத்தணி மலைக்கோவிலுக்கு வாகனங்கள் செல்ல 16ஆம் தேதி வரை தடை விதித்த கோவில் நிர்வாகம்

Update: 2023-12-12 08:52 GMT

திருத்தணி மலைக்கோவிலுக்கு வாகனங்கள் செல்ல 16ஆம் தேதி வரை தடை விதித்த கோவில் நிர்வாகம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மூலம் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். வாகனங்கள் செல்வதற்கு வசதியாக கோவில் நிர்வாகம் மலைப்பாதை அமைத்து பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்நிலையில், 'மிக்ஜாம்' புயலால் தொடர்மழை பெய்து வந்ததால் கடந்த, 5ம் தேதி, மலைப்பாதை, 12 மீட்டர் நீளம், 7 மீட்டர் உயரத்திற்கு மண்சரிவு மற்றும் தடுப்புச் சுவர் உடைந்து விழுந்தது. இதையடுத்து கோவில் நிர்வாகம் அங்கு தடுப்புகள் ஏற்படுத்தி, பேருந்து, வேன் மற்றும் கனரக வாகனங்கள் முருகன் மலைக்கோவிலுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இரு சக்கர வாகனங்கள், கார், ஆட்டோ போன்ற வாகனங்கள் மட்டும் மலைக்கோவிலுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில் கோவில் நிர்வாகம் மலைப்பாதையில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் தடுப்புச் சுவர் கட்டும் பணிகள் நேற்று ஜே.சி.பி., இயந்திரம் மூலம் துவங்கியது. மண்சரிவை சீரமைக்க துவங்கிய போது, மேலும் தொடர்ந்து மண்சரிவு அதிகளவில் ஏற்பட்டது. இதைதொடர்ந்து, முன்னெச்சரிக்கையாக மலைக்கோவிலுக்கு அனைத்து வாகனங்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மலைப்பாதையில் நடந்து சென்று தான் மூலவரை தரிசிக்க சென்றனர். வயதான பக்தர்கள் சிலர் மூலவரை தரிசிக்க முடியாமல் மலையடி வாரத்தில் இருந்து முருகப்பெருமானை தரிசித்து சென்றனர்.

இது குறித்து திருத்தணி முருகன் கோவில் இணை ஆணையர் ரமணி தெரிவித்த போது,  மலைப்பாதையில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் தடுப்பு சுவர் அமைப்பதற்கு, 15 மீட்டர் நீளம், 7 மீட்டர் உயரத்திற்கு, 20 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மண்சரிவு அதிகளவில் ஏற்பட்டதால் அசம்பாவிதங்கள் தடுப்பதற்கு, 5 நாட்களுக்கு மலைக்கோவிலுக்கு அனைத்து வாகனங்கள் தடை விதித்துள்ளனர். சீரமைப்பு பணிகள் பகல், இரவு என தொடர்ந்து நடத்த திட்டுமிட்டு உள்ளோம். அதிகபட்சமாக, 5 நாட்களுக்குள் முழுமையாக மலைப் பாதை முழுமையாக சீரமைத்து வாகனங்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News