வேலூர்: +2 தேர்வில் 92.53% மாணவ மாணவிகள் தேர்ச்சி!
வேலூர் மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ மாணவிகளில் 92.53% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
Update: 2024-05-06 13:57 GMT
வேலூர் மாவட்டத்தில் 6,032 மாணவர்கள் 7,503 மாணவிகள் என 13,535 பேர் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதினார் இதில் 5,393 மாணவர்கள் 7,131 மாணவிகள் என 12,524 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.இதன் சதவீதம் 92.53% ஆகும். இதில் மாணவர்கள் 89.41%, மாணவிகள்,95.04% தேர்ச்சி பெற்றுள்ளனர்.வேலூர் மாவட்ட தேர்ச்சியை பொறுத்தவரை மாணவர்களை விட மாணவிகளை தேர்ச்சி சதவிகிதத்தில் முன்னிலை வகிக்கின்றனர். மேலும்,வேலூர் மாவட்டத்தில் 72 அரசு பள்ளிகளில் 2,693 மாணவர்கள் 4,712 மாணவிகள் 7,405 பேர் தேர்வை எழுதினர் அதில் 2235 மாணவர்கள் 4,381 மாணவிகள் என 6,616 பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் இதில் மாணவர்கள் 82.99% மாணவிகள் 92.98% சதவீதமும் என மொத்தம் 89.35% சதவீத அரசு பள்ளி மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.