வேலூர் வரும் முதல்வர்:அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

முதல்வர் வருகையை ஒட்டி வேலூரில் முன்னேற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2024-03-29 10:48 GMT

அமைச்சர் ஆய்வு

வேலூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 2-ந் தேதி பிரசாரம் மேற்கொள்கிறார். வேலூர் கோட்டை மைதானத்தில் பிரசார கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு மேடை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.இதனை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.

வேலூருக்கு வருகிற 2-ந் தேதி வருகை தர உள்ளார். சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையைம் ஓரவஞ்சனை செய்கிறது. எனினும் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்றார். ஆய்வின்போது எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News