தனியார் சிமெண்ட் ஆலைகளுக்கு வேல்முருகன் எம்எல்ஏ எச்சரிக்கை

மக்களின் நியாயமான பிரச்சனைகளை பேசி தீர்க்காமல் பணம் இருக்குது, பதவி இருக்குது ,மேல செல்வாக்கு இருக்கு என்பது போன்ற அணுகுமுறைகளை நிறுவனம் மாற்றி கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஆலையே இயங்காத அளவிற்கு குழு நடவடிக்கை எடுக்கும் என வேல்முருகன் எம்.எல்.ஏ தெரிவித்தார்.

Update: 2023-12-22 08:44 GMT

 சட்ட பேரவை  உறுதிமொழி குழு ஆய்வு

அரியலூர் மாவட்டம் ஆலத்தியூர் பகுதியில் உள்ள ராம்கோ மற்றும் சங்கர் சிமெண்ட் ஆலைகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் தலைமையில் ஆய்வு செய்யபட்டது. அப்போது ராம்கோ சிமெண்ட் ஆலையில் சேதமடைந்துள்ள கட்டிட பகுதிகளை சுட்டிகாட்டி, இதனை ஏன் சீரமைக்கவில்லை என்றும், ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் யார் பொறுப்பு என கடிந்து கொண்டார்.

மேலும் இப்பகுதி மக்களின் நியாயமான கோரிக்கைகளை கூட சிமெண்ட் ஆலை நிர்வாகம் நிறைவேற்றவில்லை எனவும், மேலும் இந்த மாவட்டம் ஒரு காலத்தில்  நக்ஸலைட் பூமி என்றும், நியாயமான பிரச்சனைகளை பேசி தீர்க்க வேண்டும்.உள்ளூர் மக்களை மீண்டும் ஆயுத போராட்டத்திற்கு மாற்றி விடாதீர்கள் என எச்சரித்தார். மேலும் பணம் இருக்குது, பதவி இருக்குது மேல செல்வாக்கு இருக்கு என்பது போன்ற அணுகுமுறைகளை நிறுவனம் மாற்றி கொள்ள வேண்டும் எனவும், இல்லையென்றால் ஆலையே இயங்காத அளவிற்கு குழு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார். அப்போது மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி மற்றும் அரசு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News