வேங்கை வயல் விவகாரம் - அரசு வழக்கறிஞரை மாற்ற கோரிக்கை
வேங்கை வயல் விவகாரத்தில் அரசு வழக்கறிஞரை மாற்ற கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.;
Update: 2023-12-27 04:38 GMT
மனு அளிக்க வந்த கிராம மக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி அப்பகுதியில் வசிக்கும் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் உயர்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித பலம் கலக்கப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஒரு வருடம் ஆகியும் இன்னும் குற்றவாளியை கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில் இந்த வழக்கு குறித்து அரசு வழக்கறிஞர் சரியாக வாதாடவில்லை என்ற குற்றம் சாட்டி அப்பகுதி பொதுமக்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யாவை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.