34 லட்சத்து 64 ஆயிரம் பள்ளி மாணவர்களின் செல்போன் எண்கள் சரிபார்ப்பு

34 லட்சத்து 64 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. 77 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்களின் எண்கள் சரிபார்க்கப்படவில்லை. படிக்கும் மாணவர்களின் 31 சதவீதம் பேரின் எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளது. 69% மாணவர்களின் செல்போன் எண்கள் சரிபார்க்கப்பட வேண்டி உள்ளது.;

Update: 2024-05-17 16:58 GMT

பள்ளிக்கல்வித்துறை

தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு அளித்த செல்போன் எண்களில் 34 லட்சத்து 64 ஆயிரம் எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளது எனவும் 77 லட்சத்து 20 ஆயிரம் சதவீதம் எண்கள் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களின் பெயர்களுடன் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்கள் 1 கோடியே 12லட்சம் உள்ளது. இதில் பல பெற்றோருடைய செல்போன் எண்கள் தவறானதாகவும், சில எண்கள் உபயோகத்தில் இல்லாமலும் உள்ளன. மாணவர்களுக்கான நலத்திட்டங்களைச் செய்வதற்கும், அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியாமல் உள்ளது. மாணவர்களின் பெற்றோர் எண்களுக்கு ஒரு OTP அனுப்புவதன் மூலம், அவர்களின் செல்போன் எண்களைச் சரி பார்க்கின்றனர். பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை முறைமை EMIS இணையதளம் மூலம் OTP அனுப்பி சரி பார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 34 லட்சத்து 64 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன.

Advertisement

77 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்களின் எண்கள் சரிபார்க்கப்படவில்லை. படிக்கும் மாணவர்களின் 31 சதவீதம் பேரின் எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளது. 69% மாணவர்களின் செல்போன் எண்கள் சரிபார்க்கப்பட வேண்டி உள்ளது. இந்த எண்களை பள்ளி திறப்பதற்கு முன்னர் சரி பார்க்க வேண்டும் என கல்வித்துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. பள்ளியின் ஆசிரியர்கள் செல்போன் எங்களை கேட்கும் பொழுது சில பெற்றோர்கள் அச்சப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். அதுபோன்று பெற்றோர்கள் அச்சப்படாமல் சந்தேகம் ஏற்பட்டால் பள்ளிக்குச் சென்று இருக்கும் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி செல்போன் எண்களின் OTP யை அளித்து வரலாம். மாணவர்களின் கல்வி நலனுக்காக எடுக்கப்படும் இந்த முயற்சிக்கு பெற்றோர்களும் உதவிட வேண்டுமென கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News