கள்ளச்சாராய பலி 65 ஆக உயர்வு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.;
Update: 2024-06-29 03:39 GMT
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 229 பேர் மருத்தவமனைகளில் சேர்க்கப் பட்டனர். அவர்களில் நேற்று முன்தினம் வரை 64 பேர் இறந்தனர். பூரண குணமடைந்த 145 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்நிலையில் புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் கருணாபுரம் பெரியசாமி, 40; நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால், பலி எண்ணிக்கை 65 ஆக உயர்ந்தது. தற்போது, 19 பேர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.