ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் வெற்றி: முதல்வருக்கு நன்றி!

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழ்நாடு அரசு வலுவான சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டதற்காக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் நன்றி தெரிவித்தனர்.

Update: 2024-03-03 18:12 GMT

முதல்வருக்கு நன்றி

தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன், பிரபாகரன், வைத்திசெல்வன், ஜியோ டாமின், பேராட்டக் குழுவைக் சார்ந்த கிருஷ்ணமூர்த்தி, பாத்திமா பாபு, ஹரிராகவன், மகேஷ்குமார், மெரினா பிரபு, சுஜித், குணசீலன், ரீகன், ராஜா, கிதர் பிஸ்மி, சிடர் பிஸ்னி, அம்ஜித், வசந்தி, சிம்லா, கோபால், வாஞ்சிநாதன், மாரியம்மாள் ஆகியோர் சந்தித்து தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழ்நாடு அரசு முன்வைத்த வலுவான வாதங்களால் ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியதையொட்டியும் இந்த ஆலையை மூடுவதற்கு தமிழ்நாடு அரசு வலுவான சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டதற்காகவும் நன்றி தெரிவித்துக் கொண்டனர். இச்சந்திப்பின்போது தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, வளர்ச்சி ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News