தவெக கொடியை அறிமுகப்படுத்திய விஜய் !

Update: 2024-08-22 05:28 GMT

விஜய்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்தார் நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அக்கட்சியின் தலைவர் விஜய் -யால் ஏற்றப்பட்டு கொடிப் பாடலும் வெளியானது. 

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியேற்றும் விழா சென்னை பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவில் தவெக கட்சியின் தொண்டர்கள், உறுப்பினர்கள், அவரது பெற்றோர்களான எஸ்.ஏ. சந்திரசேகர், தாய் ஷோபா சந்திர சேகர் ஆகியோர் பங்கேற்றனர்.

தலைவர் விஜய் தலைமையில் ''நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.'' போன்ற பல்வேறு உறுதிமொழிகளை தொண்டர்கள் ஏற்றுக் கொண்டனர்.

பின்னர் கட்சிக் கொடியை அறிமுகம் செய்த விஜய், கொடியை ஏற்றினார். அரங்கம் அதிர கட்சிப் பாடலும் வெளியானது. அதன்பிறகு உரையாற்றிய விஜய், '' இதுவரை நமக்காக உழைத்தோம். இனி தமிழ்நாட்டிற்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் உழைப்போம். புயலுக்குப்பின் அமைதி மாதிரி நம்ம கட்சிக் கொடிக்குப் பின்னடியும் ஒரு சுவாரசியமான விஷயம் இருக்கு. அதா நீங்க எல்லாரும் எதிர்பார்த்துட்டு இருக்க அந்த நாளில் நம்முடைய கொள்கைகள், செயல் திட்டங்களுடன் கொடிக்கான விளக்கமும் அளிக்கப்படும். இது வெறும் கட்சிக்கொடி மட்டும்மல்ல தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறைக்கான வெற்றிகொடியாக பார்கிறேன். இந்தக் கொடியை உங்களது உள்ளங்களிலும், இல்லங்களிலும் சொல்லாமலேயே ஏற்றுவீர்கள் என நம்புகிறேன்'' என தெரிவித்தார்.

Tags:    

Similar News