Vijay:ஒவ்வொருவரின் வீட்டுக்கும் செல்லும் விஜய் - நிர்வாகிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு

தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி பேரை சேர்க்க உத்தரவிட்ட விஜய்

Update: 2024-02-22 06:51 GMT
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 

Vijay: நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களை சேர்க்க புதிய செயலி அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் கடந்த 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இருப்பதாக அறிவித்தார். அரசியலுக்கு வருவதாக விஜய் அறிவித்ததில் இருந்து ஒவ்வொரு நாளும் அவரது செய்திகள் இணையத்தில் டிரெண்Vijay:டாகி வருகின்றன. அதேநேரம், கட்சியை ஆரம்பித்ததோடு நின்று விடாத விஜய், சைலண்ட் மோடில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் அதிரடி காட்டி வருகிறார். கட்சிக்கு சின்னம் மற்றும் கொடி அறிமுகப்படுத்தவில்லை என்றாலும், கட்சியின் நிர்வாகிகளை சந்திப்பது, கட்சியை விரிவுப்படுத்துவதற்கான பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகின்றன.

கட்சி பெயரில் இலக்கண பிழை இருப்பதாக பேச்சுகள் அடிப்பட்டதும், ஒரு ‘க்’ சேர்த்து தமிழக வெற்றிக் கழகம் என்ற திருத்தத்தை கட்சி பெயரில் விஜய் கொண்டு வந்தார். புஸ்ஸி ஆனந்தை வைத்து கட்சிக்கு பலமாக அடித்தளமிட்டு வரும் விஜய் கடந்த 19ம் தேதி சென்னை பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளை அழைத்துள்ளார். அவர்களிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதில் 100க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். 3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த கூட்டத்தில், பல்வேறு முக்கிய விஷியங்கள் விவாதிக்கப்பட்டன.

அதில் தமிழக வெற்றிக் கழத்தில் சுமார் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த உறுப்பினர்களை சாதாரணமாக சேர்க்காமல், அவர்களுக்கு எளிமையாக இருக்க, குறிப்பாக இளைஞர்களை கவர புதிய செயலி ஒன்றௌ அறிமுகப்படுத்த விஜய் உத்தரவிட்டுள்ளார். அனைவரிடமும் செல்போன் இருப்பதால் புதிய செயலியை எளிதாக பயன்படுத்தி கட்சியில் உறுப்பினர்கள் இணைவார்கள் என்பதே விஜய்யின் திட்டமாக உள்ளது. இந்த புதிய செயலியை பயன்படுத்தி மாவட்டம், நகரம், ஒன்றியம் மற்றும் ஊரக பகுதிகளில் இருக்கும் பெண்கள், இளைஞர்கள் மற்றும் ரசிகர்களை கட்சியில் இணைக்கும் வேலைகள் நடந்து வருகின்றன.

இந்த நிலயில் தமிழக வெற்றிக் கழத்தில் உறுப்பினர்களை சேர்க்கும் பணி விரைவில் தொடங்க இருப்பதாகவும், அதிக உறுப்பினர்களை சேர்க்கும் நபர்களுக்கு கட்சியில் பொறுப்புகள் வழங்குவதில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பிப்ரவரி மாத இறுதிக்குள் தமிழக வெற்றிக் கழகத்தின் செயலி மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுமட்டுமில்லாமல் மகளிர் உறுப்பினர்களை சேர்க்க மகளிர் தலைமையிலான தனி அணியை உருவாக்கவும் விஜய் முடிவெடுத்துள்ளார். புதிய வாக்காளார் பட்டியல் வெளியானதும் அதனடிப்படையில் புதிதாக வாக்களித்த தகுதி பெற்றவர்கள், பெண்கள் உள்ளிட்டோரை கட்சியில் இணைக்க தீவிரமாக திட்டமிடப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் ஒவ்வொரு தொகுதிக்கும் விஜய்க்கு என 30 ஆயிரம் ரசிகர்கள் இருக்கும் நிலையில் அவர்களை கட்சியில் இணைக்க வேண்டும் என்பது கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல், தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் எந்த ஒரு நபருக்கும் எந்த பதவி கொடுக்கப்பட்டாலும் அது விஜய்யின் கவனத்திற்கு செல்லாமல் நடைபெறாது என்ற தகவலும் நிர்வாகிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இப்படி தற்போது உள்ள டிரெண்டிற்கு ஏற்றார்போல் இருக்கும் விஜய்யின் அரசியல் நகர்வு தமிழக அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Tags:    

Similar News