நடிகர் சங்கத்திற்கு விஜயகாந்த் பெயர் - நடிகை ராதா

நடிகர் சங்கத்திற்கு மறைந்த விஜயகாந்தின் பெயரை வைக்க வேண்டும் என்பதை நினைக்க கூடாது, அதை முதலில் செய்ய வேண்டும் நடிகர் சங்கத்திற்கு அவருடைய பெயர் பொருந்தும் வகையில் வேறு யார் பெயரும் பொருந்தாது. அவர் இருந்த போது நடிகர் சங்கத்தில் இருந்த ஒற்றுமை தற்போது இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. அவர் காலம் ஒரு பொற்காலம் போன்று இருந்தது என நடிகை ராதா தெரிவித்தார்.;

Update: 2024-01-12 02:13 GMT

நடிகை ராதா அஞ்சலி 

மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்கள், கட்சி தலைவர்கள் திரைப்பட பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் அவருடைய நினைவிடத்தில் தொடர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று நடிகை ராதா கோயம்பேட்டு பகுதியில் உள்ள அவருடைய நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் பின்னர் சாலிகிராமத்தில் உள்ள அவருடைய வீட்டிற்கு சென்று அவருடைய புகைப்படத்திற்கு மலர் தூவி, அஞ்சலி செலுத்தி விட்டு கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

Advertisement

  நடிகர் சங்கத்திற்கு மறைந்த விஜயகாந்தின் பெயரை வைப்பது குறித்த கேள்விக்கு,நடிகர் சங்கத்திற்கு மறைந்த விஜயகாந்தின் பெயரை வைக்க வேண்டும் என்பதை நினைக்க கூடாது அதை முதலில் செய்ய வேண்டும் நடிகர் சங்கத்திற்கு அவருடைய பெயர் பொருந்தும் வகையில் வேறு யார் பெயரும் பொருந்தாது. அவர் இருந்த போது நடிகர் சங்கத்தில் இருந்த ஒற்றுமை தற்போது இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை.  அவர் நடிகர் சங்கத்தில் இருந்தது ஒரு பொற்காலம் போன்று இருந்தது. ஒரு நடிகரிடம் இணைந்து நடித்துவிட்டு அவருடைய தினமும் பழகுதல் ஒரு சாதாரண விஷயம் இல்லை புலிக்குப் பிறந்தது பூனையாகாது அவருடைய இரு மகன்களும் வாழ்க்கையில் முன்னேறுவோம் என்று நம்பிக்கையாக இருக்கிறார்கள் பொதுமக்கள் அவருக்கு கொடுத்திருந்த ஆதரவு, நம்பிக்கையும் தொடர்ந்து அவருடைய குடும்பத்திற்கு கொடுக்க வேண்டும். அவருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற கேள்விக்கு, ஒரு உயர்ந்த மனிதனுக்கு என்ன கடமைகள் செய்ய வேண்டுமோ அதை எல்லோரும் இணைந்து செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

Tags:    

Similar News