விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் அலுவலர் ஆலோசனை

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து காணொளி வாயிலாக தலைமை தேர்தல் அலுவலர் ஆலோசனை மேற்கொண்டார்.;

Update: 2024-06-20 06:02 GMT
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் அலுவலர் ஆலோசனை

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து காணொளி வாயிலாக தலைமை தேர்தல் அலுவலர் ஆலோசனை மேற்கொண்டார்.


  • whatsapp icon
இன்று (19.06.2024) தலைமைச் செயலகத்தில், விக்ரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு 10.07.2024 அன்று இடைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, தலைமைத் தேர்தல் அலுவலர் சத்ய பிரத சாகு, தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து காணொலி காட்சி வாயிலாக விழுப்புரம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில், கூடுதல் தலைமைத் தேர்தல் அலுவலர் சங்கர்லால் குமாவத், இணைத் தலைமைத் தேர்தல் அலுவலர் ஸ்ரீகாந்த், மற்றும் காவல்துறை உதவி தலைவர் (சட்டம் ஒழுங்கு) ஸ்ரீநாத், மற்றும் பொதுத் (தேர்தல்கள்) உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News