''வளர்ச்சிக்காக வாக்களியுங்கள்'' மோடி ஆட்சியை புகழ்ந்த ராஷ்மிகா..!

Update: 2024-05-15 09:55 GMT

பிரதமர் மோடி - ராஷ்மிகா

கடந்த 2016 முதல் திரைப்படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா தற்போது பாலிவுட்டில் வலம் வருகிறார். இதனிடையே அண்மையில் நேர்காணல் ஒன்றில் அவர் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியை மனமாற புகழ்ந்துள்ளார்.

மும்பையில் பிரதமர் மோடியால் நவசேவா அடல் சேது பாலம் திறக்கப்பட்ட நிலையில், இதன் மூலம் இரண்டு மணி நேர பயணம் இருபது நிமிட பயணமாக மாறியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியைப் பாருங்கள். இது அற்புதமானது. உள்கட்டமைப்பு சார்ந்த திட்டமிடல் அபாரமாக உள்ளது. இந்தியா புத்திசாலித் தனமான நாடு. இளம் தலைமுறையை கொண்டுள்ள இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சி இதோடு நிற்கக்கூடாது. வளர்ச்சிக்காக வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார்.


Tags:    

Similar News