அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2024-04-02 16:47 GMT
தேர்தல் விழிப்புணர்வு

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள அனிதா நினைவு கலையரங்கில், புதிய வாக்காளர்கள் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழச்சிக்கு, மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை வகித்து பேசுகையில், தேர்தல்களில் வாக்களிப்பது மாணவர்களின் பங்கு மிக முக்கியமானதாகும். சமுதாயத்தில் பொறுப்புமிக்க பணிகளில் மிக முக்கியமாக கருதப்படும் மருத்துவ சேவையினை பயிலும் நீங்கள் வரும் காலங்களில் அரசு பணியில் இருந்தாலும், தனியார்த்துறையில் இருந்தாலும் உங்களுடைய மருத்துவ சேவையானது மிக முக்கியமானதாகும்.

கோவிட்19 காலங்களில் மருத்துவர்கள் ஆற்றிய சேவை மிகமுக்கியமானதாகும். அதேபோன்று வரும் தேர்தலிலும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். ஒவ்வொரு வாக்குக்கும் மதிப்பு உண்டு என்பதை உணர்ந்து வாக்களிக்க வேண்டும். தேர்தல்களில் நாம் பங்கேற்பது நமக்கு பெருமையாகும். நமது தேசத்துக்கும் பெருமையாகும் . எனவே அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றார்.

பின்னர் அவர், நாடகம் மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில், அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதன்மையர் முத்துகிருஷ்ணன்,

வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ், தேர்தல் விழிப்புணர்வு அலுவலர் ராமலிங்கம், வட்டாட்சியர் ஆனந்தவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Tags:    

Similar News