விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அறிக்கை

நாடாளுமன்ற வளாகத்துக்குள் தேசத்தந்தை காந்தியடிகள், அரசமைப்புச் சட்டத் தந்தை அம்பேத்கர் சிலைகளை முன்பு இருந்த இடத்திலேயே நிறுவ வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார்.

Update: 2024-06-08 05:40 GMT

நாடாளுமன்ற வளாகத்துக்குள் தேசத்தந்தை காந்தியடிகள், அரசமைப்புச் சட்டத் தந்தை அம்பேத்கர் சிலைகளை முன்பு இருந்த இடத்திலேயே நிறுவ வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார்.


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாடாளுமன்ற வளாகத்துக்குள் காந்தியடிகள், அம்பேத்கர் உள்ளிட்ட தேசத் தலைவர்கள் சிலரின் உருவச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அந்தச் சிலைகள் எல்லாவற்றையும் பாஜக அரசு அகற்றியுள்ளது. அவற்றை ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து காட்சிப் பொருளாக்குவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த எதேச்சதிகார நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டிக்கிறோம்.

அவற்றை பழைய இடங்களிலேயே நிறுவ வேண்டும் என வலியுறுத்துகிறோம். நாடாளுமன்ற வளாகத்துக்குள் இருக்கும் புரட்சியாளர் அம்பேத்கரின் சிலை 1967 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 3.66 மீட்டர் உயரம் உள்ள அந்த வெண்கலச் சிலை புகழ் பெற்ற சிற்பி வி.வி.பாக் என்பவரால் வடிவமைக்கப்பட்டு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மெமோரியல் கமிட்டியினால் நன்கொடையாக வழங்கப்பட்டது. தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 4.9 மீட்டர் உயரம் கொண்ட வெண்கலச் சிலை சிற்பி ராம் வி.சுதார் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. 1993 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

இந்த இரண்டு சிலைகளும் இந்த தலைவர்களின் உருவச் சிலைகளாக மட்டுமின்றி அவர்களது கொள்கைகளின் குறியீடுகளாகவும் விளங்குகின்றன. நாடாளுமன்றத்துக்குள் ஜனநாயக முறையிலான எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கும், போராடுவதற்கும் அந்தச் சிலைகளின் முன்னால் கூடுவதையே அரசியல் கட்சியினர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளிலும், நினைவு நாளிலும் பல்லாயிரக் கணக்கானவர்கள் நாடாளுமன்றத்துக்குள் இருக்கும் அவரது உருவச்சிலைக்கு மரியாதை செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தை அழகு படுத்துவதாக சொல்லிக் கொண்டு இந்த சிலைகளையெல்லாம் எவருக்கும் தெரியாமல் அவசர அவசரமாக மோடி அரசு அகற்றியுள்ளது. புதிய உறுப்பினர்கள் பதிவு செய்து கொள்வதற்காகப் போகும்போதுதான் இந்த உண்மை வெளியே தெரிய வந்துள்ளது.

புதிதாகக் கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடத்துக்குள் குடியரசுத் தலைவரும், பிரதமரும் நுழைவதற்குத் தனி வாயில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்குப் போகும் வழியில் தான் இந்த இணைந்து களமாடியது. இதனடிப்படையில், காங்கிரஸ் கட்சி வென்றுள்ள 99 இடங்கள் உள்ளிட்ட 234 இடங்களில் 'இந்தியா கூட்டணி' பெற்றுள்ள வெற்றி இந்திய மக்களுக்கான மாபெரும் வெற்றியே ஆகும் இந்தியா கூட்டணியால் ஆட்சியமைக்க இயலவில்லை என்றாலும், பாஜக உள்ளிட்ட சங்பரிவார்களுக்கு மிகப்பெருமளவில் அதிர்ச்சியளிக்கும் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. பாஜகவுக்கு அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிட்டவில்லை. மாறாக, கடந்த தேர்தலைவிட தற்போது 63 இடங்களை அக்கட்சி இழந்துள்ளது. அத்துடன், அவர்தம் கூட்டணி ஒட்டுமொத்தமாக 300 இடங்களைக்கூட எட்டவில்லை. எனினும், கூட்டணி கட்சிகளின் கடுமையான பேர நெருக்கடிகளுடன் கூடிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாஜக ஆட்சியமைக்க உள்ளது. பாஜக பெற்றுள்ள இவ்வெற்றியானது தோல்வியின் வலி சுமந்த வெற்றியே ஆகும்.

தனிப் பெரும்பான்மை இல்லாத வகையில்; ஐந்தாண்டுகளுக்கு நிலையாக ஆட்சி நடத்தமுடியாத வகையில்; ஆட்சியமைப்பதற்கே பிற கட்சிகளின் தயவை நாடும் வகையில் அதிகார அகந்தையென்னும் நச்சுப் பற்களைப் பிடுங்கும் வகையில் இந்திய மக்கள் பாஜகவுக்கு எதிராகவே இத்தீர்ப்பை எழுதியுள்ளனர். இந்தியர்களை 'இந்து சமூகத்தினர்' என்றும், 'இந்து அல்லாத பிற மதத்தினர்' என்றும் பாகுபடுத்தித் தொடர்ந்து அரசியல் ஆதாயம் காணும் பாஜகவினரின் சதி அரசியல் முயற்சிகளை முறியடித்துள்ளனர். குழந்தை இராமருக்கு கோவிலைக் கட்டிக் கொண்டாட்டம் நடத்திய உத்தரபிரதேச மண்ணிலேயே பாஜகவுக்கு மக்கள் படுதோல்வியைப் பரிசாக அளித்துள்ளனர். அதாவது, பெரும்பான்மை இந்துச் சமூகமே பாஜகவைப் புறக்கணித்துள்ளது என்பதுதான் இத்தேர்தல் முடிவுகள் உணர்த்தும் இயல்பான உண்மையாகும்.

இத்தகைய வரலாற்றுத் தீர்ப்பை வழங்கிய இந்திய மக்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம். அத்துடன், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் 40 வேட்பாளர்களையும் வெற்றிபெற செய்து சாதிய- மதவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தியுள்ள தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Tags:    

Similar News