வயநாடு அடுத்து தமிழ்நாடு? மண்ணில் புதையும் வீடுகள்!

Update: 2024-08-07 10:20 GMT

மண்ணில் புதையும் வீடுகள்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நீலகிரி மாவட்டம் கோக்கால் பகுதியில், மண்ணில் புதையும் வீடுகள் குறித்து இந்திய புவியியல் மூத்த வல்லுநர் யுன்யெலோ டெப் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல ஆண்டுகளாக மலை மாவட்டத்தில் வசித்துக் கொண்டிருக்கும் பழங்குடியின மக்கள் மற்றும் பலருக்கும் இந்த மண்ணின் தன்மை மற்றும் திறனுக்கேற்பக் கிராமங்கள் மற்றும் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது வெளிப்பகுதியிலிருந்து வருகை புரியும் பலருக்கும் இயற்கை அழகை ரசிக்க வேண்டும் என்று எண்ணத்திலே மலைகளின் உச்சிகளிலும், உயரமான பகுதிகளிலும் வீடுகள் மற்றும் காட்டேஜ்களை அமைக்கின்றனர். இதனால் ஏற்படும் பின் விளைவுகளை அவர்கள் அறிவதில்லை.

நீலகிரி மாவட்டம் கோக்கால் பகுதியில் வீடுகள் மண்ணில் புதைவதற்கான காரணம் குறித்து புவியியல் வல்லுநர்கள் நேரில் ஆய்வு செய்து வருவதாகவும் அதிநவீன கருவிகள் மூலம் இன்று முதல் 20 நாட்கள் ஆய்வு நடைபெற உள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும் நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்னோட்டமா, புதிய கட்டிடங்கள் கட்டப்படுவதால் பாதிப்பா எனவும் ஆய்வு செய்யப்படவுள்ளது.

சமீபத்தில் கேரள மாநிலம் வயநாடு பகுதிகள் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக தமிழகத்தில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ள பகுதிகள் மற்றும் வீடுகள் மண்ணில் புதையும் பகுதிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என சமீபத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து தற்போது நீலகிரி மாவட்டத்தில் கோக்கால் என்ற பகுதிகள் மண்ணில் புதையும் வீடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் இந்த ஆய்வுக்கு பின் அங்கு உள்ள வீடுகள் அகற்றப்படுமா அல்லது அந்த வீடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து தெரியவரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News