மூன்று நாட்களில் நான்கு பசுமாடு; வயநாட்டில் புலி சிக்கியது எப்படி?

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரியில் 3 நாட்களில் 4 பசு மாடுகளை கொன்ற புலி நேற்றிரவு வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

Update: 2024-06-25 01:56 GMT

தமிழ்நாடு ,கேரளா , கர்நாடகா என 3 மாநிலங்களின் எல்லையில் நீலகிரி மாவட்டம் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் காப்பகம், கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம், கேரள மாநிலம் முத்தங்கா வனவிலங்கு சரணாலயம் ஆகிய மூன்று வனப்பகுதியும் ஒன்றிணைந்த வனப்பகுதியாக இது உள்ளது. குறிப்பாக இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் புலிகள் இந்த மூன்று மாநில வனப்பகுதியில் தான் வாழ்கின்றன.

இந்நிலையில் நீலகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரி கேணிச்சிரை குடியிருப்பு பகுதிக்குள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு புலி ஒன்று நுழைந்தது. 3 நாட்களில் 4 பசு மாடுகளை கொன்றது. மேலும் அந்த புலி குடியிருப்பு பகுதியில் உலா வந்ததால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் புலியின் நடமாட்டத்தை உறுதி செய்து, அது டி -17 என்பதையும் உறுதிபடுத்தினர். மேலும் புலியை உயிருடன் பிடிக்க வனத்துறையினர் அப்பகுதியில் இரண்டு கூண்டுகளை வைத்தனர். இரண்டு நாட்களாக புலி சிக்காததை அடுத்து அப்பகுதி மக்கள் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் அந்த புலி நேற்று இரவு வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. கால்நடை மருத்துவ குழு புலிக்கு சிகிச்சை அளித்து வனப் பகுதியில் விடுவதா அல்லது உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்வதா என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News