பா.ஜனதா கூட்டணியில் தான் இருக்கிறோம் - ஓ.பன்னீர்செல்வம்

பிரதமர் மோடி 2 முறை பிரதமராக இருந்துள்ளார். அவரை 3-வது முறையும் பிரதமராக்க வேண்டும் என்று பாஜக கூட்டணியில் உள்ளோம். அ.தி.மு.க.வின் பெயருக்கு பங்கம் விளைவிக்கும் யாராக இருந்தாலும், எந்த பதவியில் இருந்தாலும் அதை எதிர்த்து தர்ம யுத்தம் நடத்தப்படும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

Update: 2024-02-05 07:23 GMT
நாகர்கோவிலில் ஒ பி எஸ் பேட்டி

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-      அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். உருவாக்கியபோது அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக இருக்கும் எவர் வேண்டுமானாலும் பொதுச்செயலாளர் ஆகலாம் என்று விதியை உருவாக்கி இருந்தார். பொதுச்செயலாளரை உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும் என்ற அந்த நிபந்தனையை எடப்பாடி பழனிசாமி மாற்றி 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும். 5 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று மாற்றினார். அப்படி என்றால் பணம் படைத்தவர்களால் மட்டும் தான் பொது செயலாளராக முடியும்.

இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக தான் தர்ம யுத்தம் நடத்தி வருகிறோம். அதற்காக தான் இந்த உரிமை மீட்பு கூட்டமும் நடைபெறுகிறது.  அண்ணா நினைவு நாளன்று சசிகலாவை சந்தித்தோம். மரியாதை நிமித்தமாக தான் சந்தித்தேன். அரசியல் பற்றி பேசவில்லை. பிரதமர் மோடி 2 முறை பிரதமராக வந்துள்ளார். அவரை 3-வது முறையும் பிரதமராக்க வேண்டும் என்று அந்த கூட்டணியில் உள்ளோம்.     அ.தி.மு.க.வின் பெயருக்கு பங்கம் விளைவிக்கும் யாராக இருந்தாலும், எந்த பதவியில் இருந்தாலும் அதை எதிர்த்து தர்ம யுத்தம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News