நிதிநிலை அறிக்கையை வரவேற்கின்றோம்: எம்எல்ஏ ஈஸ்வரன்

அனைவரையும் உள்ளடக்கி வளர்த்துகின்ற நிதிநிலை அறிக்கையை வரவேற்கின்றோம் என் எம்எல்ஏ ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-19 13:51 GMT

ஈஸ்வரன் எம்எல்ஏ

 தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி நிதி அமைச்சர் மற்றும் நிதித்துறை செயலாளர் ஒருங்கிணைப்பில் யாருமே குறை சொல்ல முடியாத நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு தெளிவான நிதிநிலை அறிக்கை இருக்கின்ற நிதிநிலை கொண்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு முன்னுதாரணமான நிதிநிலை அறிக்கையாகும். அனைத்து மக்களையும் உள்ளடக்கிய நிதிநிலை அறிக்கை. அனைத்து மக்களும் வளர்ச்சி பெற வேண்டுமென்று இந்த நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தினுடைய அனைத்து மாவட்டங்களும் பயன் பெறுகின்ற வகையில் அனைத்தையும் உள்ளடக்கி இந்த நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. தொழில் வளர்ச்சியில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது.

வட மாவட்டங்களில் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் பல ஏக்கர் காலி இடங்கள் உள்ளன. அப்பகுதி இளைஞர்கள் வேலை தேடி வெளி மாவட்டங்கள் செல்கின்ற நிலையில் தான் இருக்கிறார்கள். அந்த மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை கவனத்தில் கொள்வதன் மூலம் அப்பகுதி இளைஞர்கள் பயன் பெறுவார்கள். காலை உணவு திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவு படுத்தப்பட்டுள்ளது வரவேற்க கூடியது.

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு மட்டும் காலை சிற்றுண்டி உணவு கொடுப்பது ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு வருத்தத்தை அளிக்கக் கூடியதாக உள்ளது. எனவே காலை சிற்றுண்டி உணவுத் திட்டத்தை எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்த வேண்டுமென்ற கோரிக்கையை வைக்கின்றேன். கோவை மாவட்டத்தில் மிகப்பெரிய நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கக் கூடியது. அதே சமயத்தில் ஈரோடு மாவட்டத்தில் தந்தை பெரியார் பெயரில் ஒரு நூலகம் வேண்டி கோரிக்கை வைத்துள்ளேன்.

அந்த கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது வரவேற்கக் கூடியது. அதே போன்று பல கோடி ரூபாய் செலவில் தொழில் பயிற்சி மையங்கள் அமைப்பதற்கான அறிவிப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது வரவேற்கக் கூடியது. அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்விக்கு செல்கின்ற ஆண் பிள்ளைகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வரவேற்கக் கூடியது.

சுற்றுலாவை மேம்படுத்துவதற்காவும், கடலோர பகுதிகளை மேம்படுத்துவதற்காகவும் பல்வேறு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சென்னை முதல் பாண்டிச்சேரி வரை கடலோரப் பகுதிகளை தாய்லாந்து போல மற்றும் பல்வேறு நாடுகளின் கடலோரப் பகுதிகளை போல சுற்றுலாத்தலமாக அறிவித்து சுற்றுலா பகுதிகளாக மேம்படுத்த வேண்டும். செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவிப்புகள் மாநிலத்தின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு தொலைநோக்கு பார்வையோடு அறிவிக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.

தற்போது நலிவடைந்து கொண்டிருக்கின்ற ஜவுளி தொழில், லாரி தொழில் மற்றும் ரிக் தொழில் ஆகிய தொழில்களை மீட்டெடுப்பதற்கு உரிய அறிவிப்புக்கள் இருந்தால் நிறைவான நிதிநிலை அறிக்கையாக இருந்திருக்கும். மொத்தத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக இந்த நிதி நிலை அறிக்கையை வரவேற்கின்றோம். என எம்எல்ஏ ஈஸ்வரன் அறிக்கையில் கூறியுள்ளார்

Tags:    

Similar News