உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை: சுகாதாரத்துறை உத்தரவு ரத்து
உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையில் இளைஞர் மரணமடைந்த விவகாரத்தில் சுகாதாரத்துறை பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.;
Update: 2024-05-28 01:25 GMT
உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையில் இளைஞர் மரணமடைந்த விவகாரத்தில் சுகாதாரத்துறை பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஹேமச்சந்திரன் என்ற இளைஞர் மரணமடைந்த விவகாரத்தில் பம்மல் தனியார் மருத்துவமனை பதிவு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனரின் ரத்து செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து தனியார் மருத்துவமனை வழக்கு தொடர்ந்தது. நோயாளியின் முன் அனுமதி பெற்ற பிறகே அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்றும், மருத்துவமனை செயல்பட அனுமதியளித்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.