அரசு பள்ளிகளில் வரவேற்பு பெற்ற மாணவர் சேர்க்கை - அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் !

Update: 2024-06-03 08:54 GMT

 அன்பில் மகேஸ் 

தமிழக அரசு பள்ளிகளில் இதுவரை 3 லட்சத்து 11 ஆயிரத்து 476 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் மே இறுதியில் தொடங்கி ஜூலை இறுதி வரை நடைபெற்று வந்தது. இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு, மார்ச் மாதம் முதல் தேதியிலேயே மாணவர் சேர்க்கை பணிகளை பள்ளிக்கல்வித்துறை தொடங்கியது. அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு சலுகைகளை பெற்றோர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று அதிக எண்ணிக்கையில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் நடப்பு கல்வி ஆண்டில், அரசுப் பள்ளிகளில் இதுவரை மூன்று லட்சத்து 11 ஆயிரத்து 476 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News