ஓபிஎஸ்-க்கு என்ன உரிமை இருக்கிறது: திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி

4 பேருடன் ஓபிஎஸ் சுற்றி வரும் ஓபிஎஸ்க்கு என்ன உரிமை இருக்கிறது என திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2024-02-02 13:34 GMT

திண்டுக்கல் சீனிவாசன்

உரிமை மீட்பு போராட்டம் என ஓபிஎஸ் தனது சகாக்கள் 4 பேருடன் ஊர் ஊராக செல்கிறார். என்ன உரிமை இருக்கிறது என திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

திண்டுக்கல் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை பொதுக்குழுவில் நீக்கி விட்டாகிவிட்டது.அனைத்து நீதிமன்றங்களும் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் இபிஎஸ் என்பதை உறுதி செய்துள்ளது. அவருக்கு என்ன உரிமை இருக்கிறது.

4 பேரை அழைத்துக் கொண்டு ஊர் ஊராக சுற்றுகிறார். மோடிதான் நாட்டின் பிரதமர். ஆகவே யாராவது கூட்டணிக்கு வாங்க என ஓபிஎஸ் சொல்கிறார். நரேந்திரமோடிதான் இந்நாட்டின் பிரதமர் என நாங்களும் சொல்லி கொண்டு இருந்தோம்.

ஆனால், அண்ணாமலை தான் அடுத்த முதல்வர் என பாஜகவினர் பேசியது சரியல்ல. எங்களை மிரட்ட அண்ணாமலையை வைத்து பேச வைத்ததால், அமித்ஷா, மோடியிடம் ஆணித்தரமாக சொல்லிவிட்டு பாஜக கூட்டணியை விட்டு வெளியேறியவர் எடப்பாடி பழனிச்சாமி.ஓ.பி.எஸ், டி.டி.வி, சசிகலா ஆகியோர் மண்குதிரை போன்றவர்கள்.

அவர்களை ஆதரிக்கும் நண்பர்கள் இனியும் அவர்களை நம்பாதீர்கள். இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

Tags:    

Similar News