எதிர்கட்சியாக திமுக இருந்தபோது ஆளுநர் மறுக்க தைரியம் இருந்ததா?

திமுக எதிர்கட்சியாக இருந்தபோது ஆளுநர் தேவையில்லை எனக் கூற தைரியம் இருந்ததா? என பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2024-01-23 08:14 GMT

 திமுக எதிர்கட்சியாக இருந்தபோது ஆளுநர் தேவையில்லை எனக் கூற தைரியம் இருந்ததா? என பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். 

பாரதிய ஜனதா கட்சியின் ஈரோடு பாராளுமன்ற தொகுதி மகளிர் பிரதிநிதிகள் மாநாடு ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நடைபெற்றது. இதில் தேசிய மகளிர் அணி தலைவரும் , சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் , திராவிட மாடல் ஆட்சியில் பட்டியிலின மக்கள் மீதான தாக்குதல் , பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாகவும் , சிறுபான்மையின நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல்வர், அமைச்சர்கள் இந்துகள் பண்டிகைகள் குறித்து அவதூறு பரப்புகின்றனர் என்றார். திமுக எதிர்கட்சியாக இருக்கும் போது ஆளுநர் தேவையில்லை என சொல்ல தையரிம் இருந்த்தா என்று கேள்வி எழுப்பிய வானதி சீனிவாசன் , நேரத்திற்கு ஒரு பேச்சு என்பது திமுகவின் வாடிக்கை என்றார். கூட்டணி யாருடன் என்பது குறித்தும். எத்தனை தொகுதிகள் என்பது குறித்தும் தேசிய தலைமை முடிவெடுக்கும் என்றார்.

Tags:    

Similar News