எப்போது வெடி வெடிக்கலாம்- ஆட்சியர் அறிவிப்பு
By : King 24X7 News (B)
Update: 2023-11-07 12:24 GMT
மாவட்ட ஆட்சியர்
அரியலூர் மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 12 ஆம் தேதி கொண்டாடபட உள்ளது. இதனையொட்டி உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காலை 6 மணிமுதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணிமுதல் 8 மணி வரையில் மட்டும் வெடிவெடிக்க கேட்டு கொள்ளபட்டுள்ளது.
மேலும் பொதுமக்களின் உடல்நலன் மற்றும் சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்ககூடிய பேரியம் இராசயனம் கலந்து தயார் செய்யபட்ட பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கபட்டுள்ளது. மேலும் பள்ளிகள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் போன்ற அமைதி காக்கும் இடங்களில் பட்டாசுகளை வெடிக்க கூடாது என்றும், அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்த்திட வேண்டும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி கேட்டு கொண்டுள்ளார்.