மக்களவை சபாநாயகர் யார்..பர்த்ருஹரி மஹ்தாப்க்கு வாய்ப்பு?

Update: 2024-06-12 10:54 GMT

பர்த்ருஹரி மஹ்தாப்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மக்களவை சபாநாயகர் பதவிக்கு, ஒடிசாவை சேர்ந்த பர்த்ருஹரி மஹ்தாபை முன்னிறுத்த பா.ஜ.க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிஜுஜனதா தளம் கட்சியில் நீண்ட காலம் எம்.பியாக இருந்த இவர், அண்மையில் அக்கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்து, மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 1998ம் ஆண்டு, கட்டாக் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பர்த்ருஹரி மஹதாப், அதன்பின் 1999, 2004, 2009, 2014, 2019 என அனைத்து மக்களவைத் தேர்தல்களிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று, இம்முறையும் அதே தொகுதியில் இருந்து வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மிகச்சிறந்த நாடாளுமன்றவாதிக்கான விருதை பெற்றுள்ள மஹ்தாப், 2017ம் ஆண்டு முதல் 2020 வரை, தொடர்ந்து 4 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் சிறப்பான விவாதத்தை முன்னிறுத்தியதற்காக, சன்சத் ரத்னா விருதையும் பெற்றுள்ளார்.

17-வது மக்களவையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இல்லாத நேரங்களில், துணை சபாநாயகர் குழுவிலும் இடம்பெற்று அவையை திறம்பட நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News