தமிழ்நாடு பிஜேபியின் வாக்கு சதவிகிதம் உயர்ந்ததற்கு யார் காரணம் ?

கூட்டணி கட்சியினரின் வாக்குகளால் தான் தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதம் 11.24 % ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2024-06-07 02:30 GMT

2019 நாடாளுமன்ற தேர்தலில் அமமுகவிற்கு பதிவான வாக்குகள் 22 லட்சத்து ஆயிரத்து 564. வாக்கு சதவீதம் என்று எடுத்துக் கொண்டால் 5.38% வாக்குகளை கைப்பற்றியது அமமுக. ஆரணி - 46,383 தஞ்சை 1,02,871 திருவண்ணாமலை - 38,639 நெல்லை - 62,209 கள்ளக்குறிச்சி - 50,179 தென்காசி - 92,116 திருச்சி - 1,00,818 அரக்கோணம் - 66,826 மயிலாடுதுறை - 69,030 விழுப்புரம் - 58,019 விருதுநகர் - 1,07,615

திண்டுக்கல் - 62,875 மதுரை - 85,747 தூத்துக்குடி - 76,866 சிவகங்கை - 1,22,534 கடலூர் - 44,865 சிதம்பரம் - 62,308 தருமபுரி - 53,655 தேனி - 1,44,050 ராமநாதம்புரம் - 1,41,806 நாகை - 70307 உள்ளிட்ட 20 தொகுதிகளில் மூன்றாம் இடத்தை பிடித்தது அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் .

 தினகரன் மற்றும் ஓபிஎஸ் உடன் கூட்டணி அமைத்த காரணத்தால் மட்டுமே 2024 தேர்தலில் தமிழ்நாடு பிஜேபியின் வாக்கு சதவிகிதம் 11.24 % ஆக அதிகரித்துள்ளது அதாவது கிட்டதட்ட அமமுக/அதிமுகவினரின் 6% சதவிகித வாக்குகள் பிஜேபிக்கு சென்றுள்ளது வேறெந்த காரணமும் இருப்பதாக தெரியவில்லை.‌.

Tags:    

Similar News