விஜய்யின் த.வெ.க மாநாட்டுக்கு அனுமதி அளிக்க ஏன் பயம்: தமிழிசை கேள்வி!

Update: 2024-09-05 05:02 GMT

தமிழிசை சௌந்தரராஜன்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை புதன்கிழமை (செப்டம்பர் 4) சந்தித்தார்.

ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது: “கார் ரேஸ் உங்களால் அவ்வளவு சீக்கிரம் நடத்த முடிகிறது. ஆனால், ஒரு புதிய கட்சி தொடங்கி ஒரு மாநாடு நடத்துவதற்கு ஒரு இடத்தைத் தருவதற்கு, அவர் லீவுல போயிருக்கிறார். இவரு லீவுல போயிருக்கிறார், 21 கேள்வி, 22 கேள்வி, ஆக எந்த அளவிற்கு எதிர்க்கட்சிகளை நீங்கள் முடக்க நினைக்கிறீர்கள் என்பது தெரிகிறது.

பா.ஜ.க கள்ளக்குறிச்சியைப் பற்றி இங்கே ஆர்ப்பாட்டம் நடத்தும்போது, பெண்களை எல்லாம் கைது செய்தீர்கள். ஆக எதிர்க்கட்சிகள் எல்லாம் யாருமே இருக்கக்கூடாது, முடக்கிவிட வேண்டும். இந்த தி.மு.க-வுக்கு அவ்வளவு பயம் வந்துவிட்டது.

காவல்துறை அதிகாரிக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை. கார் ரேசுக்கு உடனடியாக அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், விஜய் மாநாட்டிற்கு அனுமதி கொடுப்பதில் தாமதம் ஏன்? விஜய்யின் மாநாட்டிற்கு அனுமதி வழங்க வேண்டுமென்றே தாமதம் செய்கிறார்கள். விஜய்யின் மாநாட்டைப் பார்த்து அச்சம் ஏன்” என்று தமிமிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.

ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “தாக்குதல் நடத்திவர் மீது நீங்கள் எவ்வளவோ நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், பெண் போலீஸ் அதிகாரி இன்று ஒரு பிரச்னையைக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குதான் இருக்கிறார் என்றால், காவல்துறையே தமிழகத்தில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறது. யாருக்குதான் பாதுகாப்பு இருக்கும் என்று மிகப்பெரிய கேள்விக்குறி இருக்கிறது. வெளிநாடு அண்ணன் (மு.க. ஸ்டாலின்) போய்விட்டார் என்றால், இங்கு யாரும் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கக் கூடாது என்பது இல்லை. உதயநிதி இதையெல்லாம் கொஞ்சம் பார்த்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால், வேறு வழியில்லை. எல்லோரும் பயந்து போயிருக்கிறார்கள். அமைச்சர்கள் எல்லாம், உதயநிதி, உதயநிதி என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். யாருதான் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. துரைமுருகன் இதுதான் நேரம் என்று அவரும் வெளியூர் போய்விட்டார்.” என்று கூறினார்.

விஜய்யின் த.வெ.க மாநாட்டுக்கு அனுமதி அளிப்பதில் ஏற்படும் தாமதம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு கருத்து தெரிவித்த தமிழிசை சௌந்தரராஜன், கார் ரேசுக்கு உடனடியாக அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், விஜய் மாநாட்டிற்கு அனுமதி அளிப்பதில் தாமதம் ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும், விஜய்யின் கட்சியைத் தடுப்பதைப் போல, காட்சியையும் தடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

“உங்களுக்கு ஏன் அவ்வளவு பயம், ஒரு இடத்தைக் கொடுப்பதில் என்ன பிரச்னை இருக்கிறது. இடத்தைக் கொடுத்தால் மடத்தை பிடித்துவிடுவார்கள் என்று நினைக்கிறீர்களா? பயம். நான் சினிமா எல்லாம் பார்ப்பது இல்லை. விஜய்யின் கட்சியைத் தடுப்பதைப் போல, காட்சியையும் தடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். அவருடைய கட்சி மட்டுமல்ல, எந்த புதுக்கட்சி ஆரம்பித்தாலும், ஒரு மாநாடு நடத்தும்போது, ஒரு இடத்தைக் கொடுப்பதில் உங்களுக்கு என்ன பிரச்னை என்று கேட்கிறேன். கொள்கை எல்லாம் அவர் பிறகு சொல்லட்டும். அதற்காக நாங்கள் அவருக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று அர்த்தமில்லை. நீங்கள் ஒரு கார் ரேசுக்கு எவ்வளவு தூரம் சரி செய்து கொண்டுவந்தீர்கள்.” என்று தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பினார். 

Tags:    

Similar News