தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் 300 வாழைகள் நாசம் செய்தது.;

Update: 2024-03-28 14:29 GMT

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் 300 வாழைகள் நாசம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரங்கள் உள்ளன இந்த வனச்சரங்களுக்கு உட்பட்ட வனப்பகுதியில் யானைகள் காட்டெருமைகள் மான்கள் சிறுத்தை புலி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் காணப்படுகின்றன உணவு மற்றும் தண்ணீரை தேடி வனப் பகுதியில் இருந்து வனவிலங்கு அடிக்கடி கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசப்படுத்துவது தொடர் கதையாகி வருகிறது.

Advertisement

இது போன்ற சம்பவம் தாளவாடி அருகே நடந்தது தாளவாடி வனச்சரத்துக்கு உட்பட்ட மல்குத்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிவண்ணா வயது 55 இவர் தனது வீட்டின் அருகே 3 ஏக்கர் பரப்பளவில் வாழைகள் பயிரிட்டுள்ளார் நேற்று இரவு 12 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள் சிவாண்ணாவின் வாழை தோட்டத்திற்குள் புகுந்தன.

பின்னர் யானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை இலை மிதித்தும் குருத்துகளை தின்றும் நாசப்படுத்திய யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியே வந்த சிவண்ணா யானைகள் தோட்டத்துக்குள் நிற்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் உடனே அக்கம் பக்கத்து விவசாயிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர் 2 மணி நேரம் போராட்டத்தை பிறகு யானைகள் வனப்பகுதியில் விரட்டியடிக்கப்பட்டன இதில் 300-க்கும் மேற்பட்ட வாழைகள் நாசமாகின

Tags:    

Similar News