ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன உயிரின கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்
பொள்ளாச்சி:ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பொள்ளாச்சி,உலாந்தி, வால்பாறை உள்ளிட்ட வனச்சரகங்களில் மழை காலத்திற்குப் பிந்தைய முதற்கட்ட வன உயிரின கணக்கெடுக்கும் பணிகள் நேற்று முதல் துவங்கியுள்ளது. தொடர்ந்து வரும் 18 ஆம் தேதி வரை எட்டு நாட்கள் நடைபெறும். இந்த கணக்கெடுப்பில் 62 நேர்கோட்டு பாதைகள் அமைக்கப்பட்டு மூன்று நாட்களுக்கு புலி, கருஞ்சிறுத்தை உள்ளிட்டவைகளின் கால் தடங்கல்,நகக் கீறல்கள் உள்ளிட்டவைகளை கணக்கெடுக்கும் பணியும் மூன்று நாட்கள் நேர்கோட்டு பாதையில் காட்டு யானை,மான் உள்ளிட்டவைகளை கணக்கெடுக்கும் பணியும் நடைபெறும்.
இறுதியாக கணக்கெடுப்பு பணிகள் முடிவுற்று தேசிய புலிகள் ஆணையத்தில் ஒப்படைக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட ஆனைமலையை அடுத்த நவமலை பகுதியில் வனவர்,வனக்காப்பாளர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தன் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.