நண்பர் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன்: மு.க.ஸ்டாலின்

நண்பர் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-10-01 04:21 GMT
நண்பர் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன்: மு.க.ஸ்டாலின்

Cm Stalin & Rajinikanth

  • whatsapp icon
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதனைத் தொடர்ந்து கூலி என்ற படத்திலும் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்திற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரஜினிகாந்துக்கு மருத்துவமனையில் பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட இருக்கிறது. பரிசோதனைக்குப்பின் அவர் டிஸ்சார்ஜ் ஆவார் எனத் தெரிகிறது. செரிமானம் பிரச்சனை மற்றும் கடுமையான வயிற்றுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News