இரு குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை
காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Update: 2023-12-06 06:47 GMT
உளுந்துார்பேட்டை அடுத்த கொட்டையூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி கன்னியம்மாள், 28; இவர்களுக்கு குரு, 3; மற்றும் 6 மாத குழந்தை கீர்த்தனா ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட பிரச்னையால் நேற்று வீட்டுக்கு வெளியே உள்ள மரத்தில் கன்னியம்மாள் கயிற்றால் தூக்கிட்டு மயங்கி கிடந்தார்.
உடன் அருகில் இருந்தவர்கள் அவரைக் காப்பாற்றி உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.