திருமணமான இரண்டு மாதங்களில் பெண் தற்கொலை

வேப்பனப்பள்ளி அருகே திருமணமாகி இரண்டு மாதங்களில் குடும்ப பிரச்சனையால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கோட்டாச்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-06-29 08:51 GMT

தற்கொலை 

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த மூர்த்தி கொட்டாய் பகுதியை சேர்ந்த மேகநாதன் 30 என்பவர் உடன் அதேபகுதியில் காந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த மோனிஷா 27 இருவருக்கும் திருமணமாகி இரண்டு மாதங்கள் ஆகியுள்ளது. இருவரும் வேப்பனப்பள்ளி அடுத்த சென்னசந்திரம் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து கொண்டு வாகனத்தில் அப்பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்ப்பட்டதாக கூறப்படுகிது.

Advertisement

அப்போது மனமுடைந்த மோனிஷா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் குருபரப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவயிடத்திற்கு வந்த போலீசார் மோனிஷாவின் உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்கு ஆம்பிலஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கணவர் மேகநாதனை கைது வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் ஆகி இரண்டே மாதங்களில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News