குழந்தை இல்லாத விரக்தியில் பெண் தற்கொலை

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் குழந்தை இல்லாத விரக்தியில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-04-24 01:06 GMT

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், நேருநகர், கிழக்கு வீதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் இவரது மனைவி சுமித்ரா ஸ்ரீ (42) இறந்து போன சுமத்திராவின் கணவருக்கு மனநலம் சரியில்லாததால் கடந்த ஐந்து ஆண்டுகளாக இவருக்கும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு வேலைக்கு எதுவும் செல்லாமல் தனது தம்பி கிருஷ்ணகுமார் என்பவரின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார்.

தம்பதிக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. கடந்த ஒரு வாரமாகவே தற்கொலை செய்து கொள்வதாக கூறி வந்தவர் இன்று காலை 9 மணி அளவில் கடைக்கு பொருள் வாங்கி வருவதாக சென்றவர் திரும்பி வரததால் உறவினர்கள் தேடி வந்துள்ளனர். சமூக வளைதளத்தில் பார்த்து சம்பவயிடத்திற்கு சென்ற பார்த்த போது தனது அக்கா என கிருஷ்ணகுமார் அடையாளம் காட்டினார். சத்தியமங்கலம் போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News