திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் பெண் திடீர் மரணம்
திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் மயங்கி விழுந்து பெண் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-15 12:02 GMT
கோப்பு படம்
துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம், சக்கரதேரடி தெருவைச் சேர்ந்த சண்முகப்பட்டு மனைவி சித்ரா (35). சண்முகப்பட்டு, வீரவநல்லுாரில் ஆட்டோ டிரைவர். ஓராண்டாக ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தன் தாய் வீட்டில் சித்ரா வசித்தார். இந்த தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்தற்காக சித்ரா இன்று வந்தார். கடற்கரை அருகே முடி காணிக்கை செலுத்தும் இடத்தில், அவர் மயங்கி விழுந்தார். அங்கிருந்தோர் அவரை மீட்டு கோவில் மருத்துவ மையத்தில் முதலுதவி அளித்தனர். பின்பு, அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட சிறிது நேரத்தில், அவர் உயிரிழந்தார். இது குறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.